இளையவர்களுக்கான ஆங்கில மொழிக்கல்வி

பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்கும் இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழி என்பது தவிர்க்க முடியாததாகும்.
நீங்களும் ஆங்கில மொழியில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்றுத்தருவதற்கு இரண்டு இளைய ஆசிரியர்கள் தமிழர் வள- ஆலோசனை மையத்துடன் இணைந்துள்ளார்கள்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் பட்டப்படிப்பை மேற்கொண்டவரும் , யாழ் இந்துக்கல்லூரியில் ஐந்து
வருடங்கள் ஆங்கில மொழியை கற்பித்த அனுபவம் உள்ள இளைய ஆண் ஆசிரியர் ஒருவரும், தவிரவும் நோர்வே நாட்டில் பிறந்து சிறுவயது முதல் லண்டன் மாநகரில் படித்து
பின்னர் ஆங்கில மொழியில் ஆசிரியற் கலாசாலையில் தேர்ச்சி பெற்று, லண்டனில் ஆசிரியராக கடமையாற்றிய அனுபவம் உள்ள இளய பெண் ஆசிரியர் ஒருவரும் ஆங்கிலக் கல்வியை கற்பிக்கவுள்ளார்கள்.

மிக அச்சொட்டாக ஆங்கில மொழியை பேசுவதற்கு உங்களுக்கான அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. அனைத்து அன்னை பூபதி வளாகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள்
செய்யது தரப்படும். நீங்கள் www.trvs.no என்னும் இணையத்திலோ அல்லது எம்மோடுநேரடியாக பதிவுகளை மேற்கொள்ளுமிடத்து உங்களுக்கான ஆங்கில
பாடங்களை விரைவில் ஆரம்பிக்க ஆவன செய்யப்படும்.

மிகவும் நேர்த்தியான முறையில் எழுத,வாசிப்பதோடு மட்டுமல்லாது உங்களது தேவைக்கேற்பவும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என்பதை
மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

தயார்ப்படுத்தல் வகுப்புக்கள்.
(தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)
எம்மால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இப் பயிற்சி வகுப்புக்களில் பங்குகொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்று தொடர்ந்து தமது கல்வியில் முன்னேறிச் செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் காலம்.

காலம்: சித்திரை- வைகாசி
விண்ணப்பப்படிவம்
இதற்கான கட்டணமாக முன்நூறு குரோனர்களை (kr-300.00) கீழே தரப்பட்டிருக்கும் வங்கிக்கணக்கில் செலுத்தி தங்கள் பெயர்களை 15.03.18 ற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வங்கியிலக்கம்:- Konto Nummer 5010 05 07770

தொடர்புகளுக்கு:- த.வ.ஆ.மையம் trvs@trvs.no
தொ.இல 400 565 74

////////////////////////////////////////////////////////////////////////////////////

© 2023 by Aron Saji Thasan

  • w-facebook
  • Instagram - Hvit Circle

Kontakt oss 400 56 574 /   trvs@trvs.no  /  Nedre Rommen 3 0988 OSLO