உதவிப் பாடம் திட்டம் 2016

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்க்குமான முக்கிய அறிவித்தல். புதிய அனுபவம் மிக்க ஆசிரியர்களோடு புது உத்வேகத்தோடு ஆரம்பமாகும் உதவிப் பாடம் திட்டம் / 2016 Leksehjelp
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் 4 ம் வகுப்பில் இருந்து

10ம் வகுப்பு வரை கற்கும் மாணவர்களுக்கு matematikk, naturfag மற்றும் samfunnsfag ஆகிய பாடங்களும், videregående மாணவர்களுக்கு matematikk, naturfag, fysikk மற்றும் kjemi ஆகிய பாடங்களும் அனுபவம் மிக்க புதிய ஆசிரியர்களினால் போதிக்கப்படவுள்ளது என்ற மகிழ்வான தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.

உதவிப் பாடத்திட்டமானது பிரதி ஞாயிறு தோறும் காலை 09:30 முதல் மதியம் 13:30 வரை இடம் பெறும்.

தவிரவும் பிரதி திங்கள் தோறும் பிற்பகல் 17:30 முதல் 20 :00 வரை நோர்வீஜிய மொழியையும்,
பிரதி புதன் தோறும் 17:30 முதல் 20 : 00 ஆங்கில மொழியையும்

கற்று தேர்ச்சி பெறும் அரிய வாய்ப்பும் உங்களுக்கு காத்திருக்கிறது.

புது உத்வேகத்தோடு, புதிய அனுபவம் மிக்க ஆசிரியர்களோடு ஆரம்பமாகும் உதவிப் பாடத்திட்டத்தில் உங்கள் பிள்ளைகளை இணைப்பதன் ஊடாக, மாணவர்களின் பெறுபேறுகளை
கணிசமாக அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற உவப்பான தகவலை தெரிவிப்பதில் நிறைவடைகிறோம்.

தமிழர் வள ஆலோசனை மையம்
Nedre Rommen 3 என்ற முகவரியில் அனைத்து கற்கை நெறிகளும் இடம்
பெறும்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள 464 13 658/400 56 574